உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமலாக்கத்துறை மீது செந்தில்பாலாஜி வழக்கறிஞர் புகார் V Senthil Balaji Enforcement Directorate

அமலாக்கத்துறை மீது செந்தில்பாலாஜி வழக்கறிஞர் புகார் V Senthil Balaji Enforcement Directorate

அமலாக்கத்துறை மீது செந்தில்பாலாஜி வழக்கறிஞர் புகார் V Senthil Balaji Enforcement Directorate money laundering case supreme court சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம்தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம்தேதி செந்தில்பாலாஜிக்கு எதிராக 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. சிறையில் இருந்தபோது செந்தில்பாலாஜிக்கு இதய ஆபரேஷன் செய்யப்பட்டது. உடல்நலனை சுட்டிக்காட்டி அவர் ஜாமின் கோரினார். ஆனால், வழக்கை விசரித்து வரும் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட் 3 முறையும் சென்னை ஐகோர்ட் 2 முறையும் செந்தில்பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தன. இதை தொடர்ந்து, ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடினார். இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜி 13 மாதங்களாக சிறையில் வாடுகிறார். எனவே அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என முகுல் ரோஹத்கி வாதிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இன்றும் நாளையும் மற்றொரு வழக்கில் நான் ஆஜராக வேண்டியிருக்கிறது. எனவே, இந்த வழக்கை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி எதிர்ப்பு தெரிவித்தார். அமலாக்கத்துறை இப்படி பலமுறை காரணம் கூறி விட்டது; வழக்கை இழுத்தடிப்பதுதான் அமலாக்கத்துறையின் நோக்கம்; எனவே செந்தில்பாலாஜிக்கு உடனே ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என முகுல் ரோஹத்கி கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை கேட்டதுபோல வழக்கு விசாரணையை வரும் 12ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அன்றைய தினம் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி