உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குற்றாலத்தில் தங்கியிருந்தவரை தூக்கிய போலீஸ்! Saattai Durai Murugan | Youtuber

குற்றாலத்தில் தங்கியிருந்தவரை தூக்கிய போலீஸ்! Saattai Durai Murugan | Youtuber

குற்றாலத்தில் தங்கியிருந்தவரை தூக்கிய போலீஸ்! Saattai Durai Murugan | Youtuber | Naam Tamilar Party | Arrested நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிட்டார். அவரை ஆதரித்து யூ-டியூபரும், நாம் தமிழர் கட்சி பேச்சாளருமான சாட்டை துரைமுருகன் பிரசாரம் செய்தார். அப்போது திமுக அரசையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து பேசினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது தமிழக அரசின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்து சாட்டை துரைமுருகனை தேடி வந்தனர். அவர் குற்றாலத்தில் ஒரு விடுதியில் தங்கி இருப்பதை அறிந்து, திருச்சி சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் திமுக தலைவர்கள், நடிகை குஷ்பு ஆகியோரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டுகளுக்காக ஏற்கெனவே 2 முறை கைது செய்யப்பட்டுள்ளார். ----

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !