உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை பெரிய கடை வீதியில் நடந்த சண்டை வைரல் | Viral CCTV | Coimbatore | Covai shopping street

கோவை பெரிய கடை வீதியில் நடந்த சண்டை வைரல் | Viral CCTV | Coimbatore | Covai shopping street

கோவை பெரிய கடை வீதியில் அதிகமான துணி, நகை மற்றும் பேன்சி ஸ்டோர் உள்ளது. இங்குள்ள பல கடைகளின் வியாபாரிகள் வீதி வரை நின்று கொண்டு சாலையில் செல்வோரை தங்கள் கடைக்குள் இழுத்து வியாபாரம் செய்வது வழக்கமாகி உள்ளது. கஸ்டமர்களை அடாவடியாக பிடித்து இழுப்பது குறித்து இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர். சிலர் பெண்களிடம் எல்லை மீறி தகராறு செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த சூழலில் நடந்து சென்ற பெண்ணை கடைக்கு இழுக்க முயன்ற ஒருவர் செமையாக வாங்கி கட்டி கொண்டார். அந்த வாலிபருக்கு பெண் பளார் விட்ட காட்சிகள் இணையத்தில் வைரலானது.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை