இறந்தவர்களை அனுமதியின்றி புதைத்தது விசாரணையில் அம்பலம்! Illegal Home | Nilgiris | Bodies found
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அகஸ்டின் என்பவர், 1999 முதல், லவ்ஷேர் எனும் பெயரில் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தி வந்தார். இதற்கு எந்த அனுமதியும் பெறாத நிலையில், மனநல காப்பகமாக மாற்றி செயல்படுத்தி வந்தார். அங்கு, 500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், 200 பேர் உறவினர்களால் அழைத்து செல்லப்பட்டனர். மீதம் உள்ளவர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இன்றி அனைவரும் அவதிப்பட்டனர். இதுகுறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. தொடர்ந்து, கடந்த 9ம் தேதி அதிகாரிகள் ஆய்வு செய்து காப்பகத்திற்கு சீல் வைத்ததுடன், அங்கிருந்த, 13 மன நோயாளிகள் மற்றும் இரண்டு பணியாளர்களை கோவை மற்றும் ஊட்டி காப்பகங்களில் சேர்த்தனர்.