உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாம் தமிழர் நிர்வாகிகளுக்கும் வலை | seeman | NTK | DMK | AIADMK

நாம் தமிழர் நிர்வாகிகளுக்கும் வலை | seeman | NTK | DMK | AIADMK

நாம் தமிழர் நிர்வாகிகளுக்கும் வலை | seeman | NTK | DMK | AIADMK 2026 சட்டசபை தேர்தலில், அதிமுக, நாதக கூட்டணி அமைக்கும் வகையில் அக்கட்சிகள் இணக்கமான நட்பை கடை பிடித்து வருகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு, சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு அளித்தது. நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதுாறாக பேசியதாக, நாதகவின் கொள்கை பரப்புச் செயலர் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இதற்கு அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். சாட்டை துரைமுருகனை தொடர்ந்து கருணாநிதியை விமர்சித்து சீமான் பாட்டு பாடியதையும், திமுக மேலிடம் ரசிக்கவில்லை. இதனால் சீமானுக்கு நெருக்கடி தரும் வகையில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பேச்சாளர்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் வேலைகளை திமுக மாசெக்கள் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி பற்றி அவதுாறாக பேசிய சீமான் மீது, வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் வக்கீல் நடராஜன், சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிசில் வெள்ளியன்று புகார் அளித்துள்ளார்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ