உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செல்வப்பெருந்தகையின் பின்னணி கசிந்தது இப்படி தான்! | Annamalai | TNbjp | Selvaperunthagai

செல்வப்பெருந்தகையின் பின்னணி கசிந்தது இப்படி தான்! | Annamalai | TNbjp | Selvaperunthagai

செல்வப்பெருந்தகையின் பின்னணி கசிந்தது இப்படி தான்! | Annamalai | TNbjp | Selvaperunthagai | Congress சமீபத்தில் செல்வப்பெருந்தகை தன் மனைவி பெயரில் வாங்கி குவித்திருக்கும் சொத்துகள் குறித்து எனக்கு நிறைய தகவல்கள் வந்துள்ளன. அவற்றை வெளிப்படுத்துவதோடு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசினார். சென்னை தி.நகரில் ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை தொடர்புடையவர், போலீசாரின் சரித்திர பதிவேடு பட்டியலில் இருந்தவர் என்றும் அண்ணாமலை விமர்சித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தயாரா? அண்ணாமலை மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கிரிமினல் அவதுாறு வழக்கும் தொடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை பதில் கொடுத்தார். தொடர்ந்து செல்வப்பெருந்தகை தரப்பினர், சென்னை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளனர். அண்ணாமலை பேசியதை வைத்து அவர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என அந்த அதிகாரி கூறியுள்ளார். அதிருப்தி அடைந்த செல்வப்பெருந்தகை விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டது கட்சியில் இருக்கும் பலருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரது குற்றப்பின்னணியை ஆதாரங்களுடன் சேகரித்து, அண்ணாமலை தரப்பிடம் அளித்துள்ளனர். அதில் செல்வப்பெருந்தகையின் சொத்துக்கள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளன. இதை வைத்தே செல்வப்பெருந்தகைக்கு சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது என்றார்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை