/ தினமலர் டிவி
/ பொது
/ இண்டி கூட்டணி தோல்வி:மகாராஷ்ட்ராவில் பாஜ உற்சாகம் BJP, Maharashtra Legislative Council Poll
இண்டி கூட்டணி தோல்வி:மகாராஷ்ட்ராவில் பாஜ உற்சாகம் BJP, Maharashtra Legislative Council Poll
மகாராஷ்ட்ராவில் 11 எம்எல்சி பதவிகளுக்கான தேர்தல் சட்டசபை வளாகத்தில் நடந்தது. மகாராஷ்ட்ராவில் உள்ள 274 எம்எல்ஏக்களும் ஓட்டளித்தனர். பாஜ தலைமையிலான கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது. முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா முண்டே உட்பட 5 வேட்பாளர்களை பாஜ நிறுத்தியது. ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலா 2 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தின. உத்தவின் சிவசேனா தலைமையிலான இண்டி கூட்டணி 3 வேட்பாளர்களை நிறுத்தியது.
ஜூலை 13, 2024