உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகை கவுதமி புகாரில் அழகப்பன் மீண்டும் கைது

நடிகை கவுதமி புகாரில் அழகப்பன் மீண்டும் கைது

நடிகை கவுதமி புகாரில் அழகப்பன் மீண்டும் கைது 1990களில் தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. சம்பாதித்த பணத்தை கொண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமராதபுரம் உட்பட தமிழகம் முழுவதும் அங்காங்கே நிலம் வாங்கினார். அவரிடம் ரசிகராய் அறிமுகமாகிய சினிமா பட தயாரிப்பாளர் அழகப்பனை கவுதமி நம்பினார். மேனேஜர் பொறுப்பு கொடுத்தார். தனக்கு சொந்தமான 8.3 ஏக்கர் நிலத்தை விற்றுத்தர அழகப்பனுக்கு சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பவர் செய்து கொடுத்துள்ளார். அழகப்பனும் அவரது நண்பர்கள் பலராமன், ரகுநாதன் ஆகியோர் அந்த நிலத்தையும், இன்னும் சில நிலங்களையும் மும்பை சேர்ந்த Jaya Hind Investments (P) Ltd., என்ற நிறுவனத்துக்கு 2015 ஆம் ஆண்டில் விற்பனை செய்தனர். 4.10 கோடி ரூபாய்க்கு நிலம் விலைபோனதாக, கூறி, அந்த பணத்தை கவுதமியிடம் அழகப்பன் கொடுத்தார். 2021ல் வருமான வரித்துறையில் இருந்து கவுதமிக்கு நோட்டீஸ் வந்தது. அப்போது தான், தனக்கு சொந்தமான இடத்தினை ரூ.11 கோடிக்கு அழகப்பனும், அவரது நண்பர்களும் விற்றிருப்பதை கவுதமி அறிந்தார். தனக்கு வெறும் ரூ. 4.10 கோடி மட்டும் கொடுத்து அழகப்பன் ஏமாற்றியதை அறிந்து கவுதமி கோபமடைந்தார். இதுகுறித்து கவுதமி போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்களில் அழகப்பனும் குடும்பத்தாரும் ஜாமின் பெற்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூரில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள கவுதமியின் நிலத்தையும் அழகப்பன் ரூ.60 லட்சம் ரூபாய்க்கு விற்றதையும் 2021க்கு பிறகு கவுதமி தெரிந்து கொண்டார். அந்த பணத்தை தன்னிடம் வழங்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கவுதமி புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன், பலராமன் ஆகிய 2 பேர்மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கவுதமியின் அண்ணன் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் அழகப்பன் ரூ.1 கோடியே 63 லட்சத்துக்கு விற்றுள்ளார். அந்த பணத்தையும் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை. ஸ்ரீகாந்தும் காஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். இந்த 2 வழக்குகளில் அழகப்பனை தேடி வந்த போலீசார், நேற்று மாலை சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை