தமிழக அரசியல் நிலவரம் மோடியுடன் ரவி ஆலோசனை Governor Ravi meets PM Modi|
தமிழக அரசியல் நிலவரம் மோடியுடன் ரவி ஆலோசனை Governor Ravi meets PM Modi| TN Governor Ravi | Delhi| Amstrong murder| DMK அரசு முறை பயணமாக இன்று டில்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை, அரசு நிர்வாகம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி சாராய மரணம், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் என்கவுன்டர் உள்ளிட்டவை குறித்து, பிரதமர் மோடியிடம் கவர்னர் ரவி விளக்கியதாக கூறப்படுகிறது. தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த அன்பும், அக்கறையும் வைத்துள்ளார். தமிழக வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை குறித்து பிரதமருடன் ஆலோசித்ததில் மகிழ்ச்சி என ரவி கூறினார். அதைத் தொடர்ந்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் கவர்னர் ரவி சந்தித்தார். 5 நாள் பயணமாக டில்லி சென்றுள்ள ரவி, மேலும் சில மத்திய அமைச்சர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.