எஸ்ஐக்கு வீடியோ அனுப்பி தம்பதி எடுத்த விபரீத முடிவு
எஸ்ஐக்கு வீடியோ அனுப்பி தம்பதி எடுத்த விபரீத முடிவு தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் ஹெஜ்ஜோலியை சேர்ந்தவர் அனில். வயது 28. இவருக்கும் பொத்தங்கலை சேர்ந்த 24 வயதான ஷைலஜா என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஷைலஜாவின் கடந்த காலத்தை பற்றி புகுந்த வீட்டாரிடம் சித்தியே இல்லாததும் பொல்லாததுமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனில், கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உறவினர்களின் பேச்சால் மனமுடைந்த தம்பதி, தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். வீட்டில் இருந்தால் தங்களை காப்பாற்றி விடுவார்கள் என்பதால், அனிலின் இண்டர்வியூ விஷயமாக வெளியூர் செல்வதாய் கூறி விட்டு வீட்டிலிருந்து கிளம்பினர். உறவினர்களின் அவதூறு பேச்சால் தாங்கள் பட்ட துன்பத்தையும், அவமானங்களையும் வீடியோவாக பதிவு செய்தனர். அதை கோத்தகிரி எஸ்.ஐ. சந்தீப்பிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தனர். இருவரும் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அந்த வீடியோவில் சொல்லி இருந்தனர். ஷைலஜாவின் வீடியோவை பார்த்த எஸ்.ஐ. சந்தீப் உடனே கோதாவரி பகுதி போலீசாரை அலெர்ட் செய்தார். அனில், ஷைலஜா வந்தால் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்துங்கள் என உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவை தாண்டியும் இருவரும் கோதாவரி ஆற்றுப்பகுதிக்கு வரவில்லை.. அனிலும் ைஷலஜாவும் எங்கே இருக்கிறார்கள் என,அவர்களது செல்போன் சிக்னலை போலீசார் செக் செய்தனர். ஃபகீராபாத் மற்றும் மிட்டாபூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே இருப்பது தெரிந்தது. அங்கு போலீசார் சென்று தேடினர். தண்டவாளத்தில் இருவரின் சடலங்களும் கிடந்தன. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருந்தனர். சடலங்களை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது போலீசாரிடம் வந்தால் உரிய கவுன்சிலிங் வழங்கப்படும். அதை விட்டு இதுபோல விபரீத முடிவை எடுப்பது எந்த விதத்திலும் தீர்வாக இருக்காது என சப் இன்ஸ்பெக்டர் சந்தீப் கூறினார்.