மாஜி முதல்வர் மகளுக்கு 4 மாதமாக நீடிக்கும் சிறை வாசம் | BRS leader Kavitha | Health issue
மாஜி முதல்வர் மகளுக்கு 4 மாதமாக நீடிக்கும் சிறை வாசம் | BRS leader Kavitha | Health issue | Tihar jail | Admitted in hospital | டில்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெலங்கானா முன்னாள் முதல்-வர் சந்திரசேகர் ராவின் மகளும், பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்க அதிகாரிகள் மார்ச் 15ல் கைது செய்தனர். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை இதே வழக்கில் ஏப்ரல் 11ல் சிபிஐ அதிகாரிகளும் கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு கவிதாவின் சகோதரர் கே.டி.ராமராவ், உறவினர் டி.ஹரீஷ் ராவ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் சிறையில் அவரை சந்தித்தனர். அதற்கு முன்பு முன்னாள் அமைச்சர்களான பி. சபிதா இந்திரா ரெட்டி, சத்தியவதி ரத்தோட் ஆகியோரும் கவிதாவை சந்தித்து பேசினர். இவரது நீதிமன்ற காவல் ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில் சிறையில் இருந்தபோது கவிதாவுக்கு திடீரென உடல்நலம் பாதித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.