/ தினமலர் டிவி
/ பொது
/ விதிகளை மாற்றியும் பணி நியமனத்தில் தொடரும் குளறுபடி | Corporation assistant commissioners | TN Govt
விதிகளை மாற்றியும் பணி நியமனத்தில் தொடரும் குளறுபடி | Corporation assistant commissioners | TN Govt
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், ஏராளமான உதவி கமிஷனர் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், வருவாய் துறையில் இருந்து, சப் கலெக்டர் அந்தஸ்தில் உள்ள தாசில்தார் போன்ற அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஆனால் 2023ல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் தொடர்பாக, புதிய அரசாணை எண்:152 வெளியிடப்பட்டது. அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்களையே, உதவி கமிஷனர்களாக நியமிக்க வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டது.
ஜூலை 17, 2024