உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுவன் செய்த செயலால் சென்னையில் ஏற்பட்ட பரபரப்பு | Car accident | Chennai | Viral CCTV

சிறுவன் செய்த செயலால் சென்னையில் ஏற்பட்ட பரபரப்பு | Car accident | Chennai | Viral CCTV

சென்னை ஜாம்பஜார் சாலையில், அதிவேகமாக சென்ற கார் ஒன்று, வழியில் நின்றிருந்த வாகனங்களை சுக்குநூறாக நொறுக்கிவிட்டு சென்றது. ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர்கள், காரை சேஸ் செய்து வழிமறித்தனர். கார் கண்ணாடியை உடைத்து டிரைவரை பிடித்தனர். அப்போது தான் காரை அதிவேகமாக ஓட்டி வந்தது 14 வயது சிறுவன் என தெரிந்தது. சிறுவனையும், அவனுடன் வந்த நண்பனையும் போலீசிடம் ஒப்படைத்தனர். 9ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன், பெரியப்பாவின் காரை அவருக்கே தெரியாமல் எடுத்து வந்தது விசாரணையில் தெரிந்தது. கெத்து காட்ட கார் ஓட்டி வந்து, இப்படி ஒரு சம்பவத்தில் சிக்குவேன் என எதிர்ப்பார்க்கவில்லை என அந்த சிறுவன் அழுது தீர்த்தான்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ