உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிக்கிமில் தொலைந்த அரசியல் புள்ளி பிணமாக மீட்பு | Former Sikkim Minister | RC Poudyal | Sikkim

சிக்கிமில் தொலைந்த அரசியல் புள்ளி பிணமாக மீட்பு | Former Sikkim Minister | RC Poudyal | Sikkim

சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆர்.சி.பவுடியால். (RC Poudyal) 80 வயதான இவர் ஜூலை 7அன்று சிக்கிமில் உள்ள அவரின் சொந்த ஊரான சோட்டா சிங்டாமில் இருந்து காணாமல் போனார். தனிப்படை போலீசாரின் 9 நாள் தேடுதலில் பவுடியாலின் உடல் நேற்று மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகே கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. பவுடியால் அணிந்து இருந்த வாட்ச் மற்றும் உடமைகளை வைத்து அவரை அடையாளம் கண்டு உள்ளனர். சிக்கிமில் தொலைந்தவர் மேற்கு வங்க கால்வாயில் பிணமாக மிதந்து எப்படி என போலீசார் புலன் விசாரணையை துவக்கி உள்ளனர். பவுடியால் உடல் அங்குள்ள ஒரு ஆற்றின் வழியாக அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை