உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மருத்துவமனையில் நடந்த திக் திக் சம்பவம்

மருத்துவமனையில் நடந்த திக் திக் சம்பவம்

மருத்துவமனையில் நடந்த திக் திக் சம்பவம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் எம்எல்ஏ விடுதி பணியாளராக இருப்பவர் ரவீந்திரன். வயது 59. CPI கட்சி உள்ளூர் செயலாளராகவும் இருக்கிறார். முதுகு வலி சிகிச்சைக்காக சனியன்று திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு சென்றார். முதல் தளத்திற்கு செல்ல லிப்டில் செல்லும்போது, திடீரென ரிப்பேர் ஆகி லிப்ட் இடையில் நின்றது. லிப்ட் குலுங்கியதில் கையில் இருந்த செல்போன் கீழே விழுந்து உடைந்துவிட்டது. லிப்டில் இருந்த அலாரம் பெல் அழுத்தியும், அங்கிருந்த போனில் எமர்ஜென்ஸி நெம்பருக்கு கால் செய்தும் எந்த பதிலும் இல்லை. கதவுகளை ஓங்கி அடித்தபடி, காப்பாற்றும்படி கத்தினார். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சோர்ந்துபோன ரவீந்திரன் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டார். லிப்டில் லைட், பேன் இல்லை. காற்று வந்ததால் உயிர் தப்பினார். அவசர நேரத்தில் லிப்டிலேயே சிறுநீர் கழித்தார். தாகம், பசியால் அவரால் தூங்க கூட முடியவில்லை. பயத்தில் ஏற்பட்ட படபடப்பில் அப்படியே மயங்கிவிட்டார். சனியன்று இரவு ரவீந்திரன் வீட்டுக்கு வராததால், அவர் இரவு பணியில் இருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்தனர். அடுத்தநாள் ஞாயிறு மாலை வரை வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் போன் செய்தும் கால் போகவில்லை. கட்சி அலுவலகம், ஹாஸ்டலில் சென்றுவிசாரித்தனர். அங்கும் அவர் இல்லாததால் போலீசில் புகார் அளித்தனர். திங்களன்று காலையில் மருத்துவமனையின் லிப்ட் ஆபரேட்டர் வந்து பார்த்தபோதுதான், ரவீந்திரன் லிப்டில் சிக்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் லிப்ட் ஆபரேட்டர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை