உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனிமைபடுத்திக் கொண்டு பணிகளை தொடரும் பைடன்! Joe Biden |

தனிமைபடுத்திக் கொண்டு பணிகளை தொடரும் பைடன்! Joe Biden |

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலையொட்டி லாஸ் வேகாஸில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு லேசானா கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து டாக்டர்கள் அவருக்கு கோவிட் தொற்றை உறுதி செய்தனர். இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பாக்ஸ்லோவிட் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு டெலாவேர் திரும்புவார். அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார். அங்கிருந்தபடி தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது, நான் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நான் குணமடைவதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளேன். அந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ