உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் சதி உருவானது இப்படி தான்! | Armstrong Murder Case | Armstrong Case | Crime | BSP

ஆம்ஸ்ட்ராங் சதி உருவானது இப்படி தான்! | Armstrong Murder Case | Armstrong Case | Crime | BSP

தமிழகத்தை பரபரப்பாக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதி வலைகள் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது. வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசார் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்வதற்கு முன் ரவுடிகள் கவுரிசங்கர், குப்புசாமி, விஜி, கிச்சா, கீனோஸ் ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் வலம் வருவார். அவர்களின் சில பிரச்னைகளில் நேரடியாக தலையிட்டார். ஒரு கட்டத்தில் தொழில் போட்டி காரணமாக அவருக்கும், இப்போது வேலுார் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனுக்கும் நேரடி பகை ஏற்பட்டது. நாகேந்திரனின் எதிரியான பாம் சரவணன் கோஷ்டியில் ஆம்ஸ்ட்ராங் ஐக்கியமானார். பாம் சரவணன் தம்பி தென்னரசுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியில் மாவட்ட செயலர் பொறுப்பு வழங்கி பாதுகாப்பு அரணாக இருந்தார். இது தென்னரசின் எதிரி ஆற்காடு சுரேஷுக்கு பிடிக்கவில்லை. அவர் கட்டப்பஞ்சாயத்துகளில் ஆம்ஸ்ட்ராங்குடன் மோதி வந்தார். 2015ல் ஆம்ஸ்ட்ராங் வலது கரம் தென்னரசை, ஆற்காடு சுரேஷ் கொன்றார்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை