அமோனியா சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
அமோனியா சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு தூத்துக்குடி புதூர் பாண்டியபுரத்தில் கடல் உணவுகளை பதப்படுத்தும் மீன்பதன ஆலை உள்ளது. 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 29 பேர் பெண்கள். பலர் ஒடிசாவை சேர்ந்தவர்கள். ஊழியர்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அமோனியா சிலிண்டர் வெடித்தது. அமோனியா வாயு வேகமாக கசிந்தது. அனைருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. 30 பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணிக்கு சென்ற சிப்காட் தீயணைப்பு வீரர் வெங்கடசாமிக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தாளம்புத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஜூலை 20, 2024