புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? | senthil balaji health | ED
புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? | senthil balaji health | ED | Senthil Balaji case சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆகின. இதனால் ஓராண்டுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவிக்கிறார். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறையில் உள்ள டாக்டர்கள் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்கிருந்த டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். அவர் உடல் நிலை சீரானதும் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று சிறை வட்டாரம் கூறியது. நாளை செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் அவர் நேரில் ஆஜராக இருப்பது குறிப்பிடத்தக்கது.