மருமகள் மீதான கோபத்தில் குழந்தையை பழி வாங்கிய மாமியார்
அரியலூர் கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா - சந்தியா தம்பதி. ராஜா வெளிநாட்டில் வேலை செய்கிறார். 2 வயது மகன், 1 வயது மகள், 60 வயதான மாமியார் விருதம்பாளுடன் சந்தியா வசித்து வருகிறார். சந்தியா வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மகள் கிருத்திகா சுய நினைவின்றி தரையில் கிடந்தாள். அவள் வாயில் மண் அடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த சந்தியா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். மகள் பிறந்தது முதலே, அவள் மீது மாமியார் வெறுப்புடன் நடந்து கொண்டதாக போலீசில் சந்தியா கூறினார்.
ஜூலை 21, 2024