/ தினமலர் டிவி
/ பொது
/ பழிவாங்க காத்திருக்கும் கும்பல்; அலர்ட் செய்த உளவுத்துறை Amstrong | BSP| Bomb saravanan
பழிவாங்க காத்திருக்கும் கும்பல்; அலர்ட் செய்த உளவுத்துறை Amstrong | BSP| Bomb saravanan
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழி தீர்க்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சதிவலையில் ரவுடிகள் கூட்டணி போட்டு கதையை முடித்துள்ளனர். கைதானவர்களில் சுரேஷின் தம்பி பொன்னை பாலு, மைத்துனர் அருள், சுரேஷுடன் வாழ்ந்த அஞ்சலை முக்கியமானவர்கள். இச்சூழலில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை பழிவாங்க, தலைமறைவாக இருக்கும் ரவுடி பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜூலை 21, 2024