உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உ.பி. பாணியில் புல்டவுசரை களமிறக்க ஆலோசனை | MKstalin | Rowdy | Chennai Police

உ.பி. பாணியில் புல்டவுசரை களமிறக்க ஆலோசனை | MKstalin | Rowdy | Chennai Police

சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சேலத்தில் அதிமுக நிர்வாகி, மதுரையில் அமைச்சர் வீட்டருகே நாம் தமிழர் நிர்வாகி, கடலுாரில் பாமக நிர்வாகி என சமீபத்தில் அரசியல் புள்ளிகளே கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் என பட்டியல் போட்டு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை விமர்சித்து இருந்தார் பழனிசாமி. திமுகவுடன் கூட்டணியாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விசிகவும் கவலை தெரிவித்தன. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை கேட்டு அமித் ஷாவுக்கு, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அழுத்தம் கொடுத்தார். சட்டம் ஒழுங்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னை ஐகோர்ட், தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையம் உள்ளிட்டவைகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து விளக்கம் கேட்டன. இப்படி பல முனைகளில் இருந்து நெருக்கடி தொடர்வதால் சட்டம் ஒழுங்கை சரி செய்ய போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஜூலை 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை