ED இப்படி பண்றாங்களே: செந்தில் வக்கீல் வாதம் Senthil balaji| ED case| PMLA case
ED இப்படி பண்றாங்களே: செந்தில் வக்கீல் வாதம் Senthil balaji| ED case| PMLA case சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டாக சிறையில் உள்ளார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் செந்தில் முறையிட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதியப்படும் என்றும், செந்தில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். இதனால், இன்று நடைபெற வேண்டிய குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரினார் செந்தில். இந்த மனுவை இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் ஆஜர் ஆகாத நிலையில், 29ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. செந்திலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்ததால், 49வது முறையாக அவரது காவல் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் வக்கீல் ரோத்தகி வாதிட்டார். செந்தில் பாலாஜி கைதாகி 13 மாதங்கள் ஆகிறது. அவருக்கு இதய ஆபரேஷன் நடந்துள்ளது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள், எப்போது முடியும் என்பது கடவுளுக்குதான் தெரியும் என்றார். நீதிபதிகள் கூறும் போது, ஆபரேஷன் செய்தவரை நோய்வாய்பட்டு உடல்நிலை சரியில்லாதவர் என கூற முடியுமா? என கேட்டனர். பின், ஜாமின் மனு மீதான விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.