உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திராவில் வன்முறை; டில்லியில் ஜெகன் தர்ணா

ஆந்திராவில் வன்முறை; டில்லியில் ஜெகன் தர்ணா

ஆந்திராவில் வன்முறை; டில்லியில் ஜெகன் தர்ணா ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் அமோக வெற்றிபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. முதல்வராக மீண்டும் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். சந்திரபாபு ஆட்சிக்கு வந்தபிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நெருக்கடிக்கு ஆளானார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரின் வீடுகள், கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. தன் கட்சியினர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்தும், ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, உடனே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இன்று டில்லி ஜந்தர் மந்தரில் ஜெகன்மோகன் தர்ணா போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜந்தர் மந்தரில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அலுவலகங்கள், தலைவர்கள் வீடுகள் தாக்கப்பட்ட படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது: நேற்று எங்கள் ஆட்சி நடந்தது. இன்று தெலுங்கு தேசம் கட்சினர் ஆட்சியில் இருக்கிறார்கள், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதுபோன்ற தாக்குதல்களை ஊக்கப்படுத்தவில்லை. கொடூர சம்பவங்களை கண்டும் காணாத மாதிரி போலீஸ் இருக்கிறது. குற்றச் செயல்களுக்கு துணைபோகிறது. எங்கள் கட்சியினர் மீது 300க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள், 100க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தினார்.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !