செந்தில் ஜாமின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி Senthil balaji| senthil bail case|
செந்தில் ஜாமின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி Senthil balaji| senthil bail case| சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு ஓராண்டாக சிறையில் உள்ளார். சென்னை முதன்மை அமர்வு கோர்ட், ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டார். அமலாக்கத்துறை எதிர்ப்பால் கிடைக்கவில்லை. இதனால், ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். முன்னதாக, செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றிய பென்டிரைவில், அவர் யார் யாரிடம் 67 கோடி ரூபாய் பெற்றார் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ED கூறி வருகிறது. திங்களன்று ஜாமின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, செந்திலின் வக்கில் முகுல் ரோஹத்கி வாதிட்டார். அந்த பென்டிரைவில் செந்தில் பாலாஜி தொடர்பான எந்த தகவலும் இல்லை. அதை பற்றி அமலாக்கத்துறை இதுவரை கட்டவில்லை என்று கூறியிருந்தார். ஜாமின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு விசாரித்தது. பென்டிரைவில் எந்த தகவலும் இல்லை என்று மனுதாரர் வக்கீல் சொல்கிறார். எனவே, அமலாக்கத்துறை அந்த பென்டிரைவில் என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்பதை கோர்ட்டுக்கு காட்ட வேண்டும் என நீதிபதிகள் கூறினர். பென்டிரைவில் செந்தில் தொடர்பான விஷயங்கள் இல்லை என கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை சொன்னது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறையிடம் இதற்கு உடனடி பதில் இல்லை என்றால், நாளை பதிலோடு வாருங்கள் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.