விபரீத முடிவுக்கு என்ன காரணம்? TNPL| Kathipara Bridge| Samuvel Raj| Cricketer
சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ். வயது 23. மாநில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இவர், கிரிக்கெட் பயிற்சியாளராகவும் இருந்தார். TNPL எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் கடந்த முறை இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்தாண்டு அணியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். எனினும் இந்த முறையும் சாமுவேல் ராஜுக்கு கிடைக்கவில்லை. சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். இன்று காலை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துவிட்டு, டூவீலரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கத்திப்பாரா மேம்பாலத்தில் செல்லும்போது, பாதியில் டூ வீலரை நிறுத்திய சாமுவேல் ராஜ், திடீரென பாலத்தின் மேலிருந்து குதித்தார்.