உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினசரி உணவில் உயிர் குடிக்கும் ரசாயனம்: ஷாக் ரிப்போர்ட் | Chlorpyrifos in rice flour & broke wheat

தினசரி உணவில் உயிர் குடிக்கும் ரசாயனம்: ஷாக் ரிப்போர்ட் | Chlorpyrifos in rice flour & broke wheat

தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களின் உணவுகளில், சமீபகாலமாக சம்பா ரவை முக்கிய இடம் பிடித்துள்ளது. இதன் விற்பனையும் அமோகமாக நடக்கிறது. சம்பா ரவை தயாரிக்கும் நிறுவனங்கள் கோவையில் பெருகி விட்டன. இங்கு தயாராகும் ரவையை சோதித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதித்த அளவைவிட 6 மடங்கு அதிகமாக ரசாயனம் இருந்துள்ளது. குறிப்பாக, உணவு பொருட்கள் கெடாமலிருக்க பயன்படுத்தும் ரசாயனமான குளோர்பிரிபோஸ் (Chlorpyrifos) அனுமதிக்கப்பட்ட அளவான 0.01 மிகி என்பதற்கு பதிலாக 0.0604 என்ற அளவுக்கு இருப்பது தெரியவந்தது.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ