உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா கொடுத்த 8 நிமிட கவுரவம்! Anti-Israel protest

இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா கொடுத்த 8 நிமிட கவுரவம்! Anti-Israel protest

இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா கொடுத்த 8 நிமிட கவுரவம்! Anti-Israel protest | Hamas Terrorist war | Israel PM Benjamin Netanyahu | Iran Funding இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இடையேயான போர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடந்து வருகிறது. இதுவரை 1,500 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் அதிகமான காசா மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழலில், அமெரிக்க பார்லிமென்ட் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்றார். சபை உறுப்பினர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று அவரை வரவேற்றனா். பிரத் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது: ஹமாஸ் அமைப்பினருடனான போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போரை தொடா்ந்து போராடுவோம். இஸ்ரேல் ஒருபோதும் பின்வாங்காது. ஹமாஸ் தோற்கடிக்கப்படும் நாளில் புதிய காசா பிறக்கும். காசாவை கைப்பற்ற விரும்பவில்லை. இஸ்ரேல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத காசாவை உருவாக்க விரும்புகிறோம். இது எங்கள் உரிமை. புதிய தலைமுறை பாலஸ்தீனியர்களாவது, இஸ்ரேல் எதிர்ப்பு மனப்பான்மை இல்லாமல் வளர வேண்டும். இஸ்ரேல் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் போா் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பரிசீலிப்போம். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடுபவர்கள் ஈரானின் முட்டாள் கைப்பாவைகள். இஸ்ரேல் வரலாறு தெரியாமல் போராடுகிறார்கள். இஸ்ரேலுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு ஈரான் பணம் கொடுக்கிறது. உலகம் முழுவதும் இஸ்லாமை பரப்ப ஈரான் விரும்புகிறது, அதற்கு அமெரிக்கா தடையாக இருப்பதால், அமெரிக்காவை மிக பெரிய எதிரியாக ஈரான் கருதுகிறது. மத்திய கிழக்கு பகுதியில், சுற்றி முஸ்லிம் நாடுகள் இருந்தும், அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருக்கும் நாடு இஸ்ரேல் மட்டும் தான். காசா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அதிபா் ஜோ பைடன் செயல்படுவது பாராட்டுக்குரியது. காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் இருப்பதற்கு உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லவிடாமல் தடுப்பது காரணமல்ல. அவா்களுக்கு அனுப்பப்படும் பொருள்களை ஹமாஸ் அமைப்பினா் திருடிக்கொள்கின்றனர் என நெதன்யாகு கூறினார்.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ