உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திண்டுக்கல் நெசவாளருக்கு தேசிய விருது அறிவிப்பு | Ministry of Textiles | National Handloom Award

திண்டுக்கல் நெசவாளருக்கு தேசிய விருது அறிவிப்பு | Ministry of Textiles | National Handloom Award

மத்திய ஜவுளி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறந்த நெசவாளர்களுக்கு விருது வழங்கும். அந்த வகையில் 2023ம் ஆண்டு விருதுக்கு தேர்வான நெசவாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த இரண்டு நெசவாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் பாலசுப்ரமணியன் இந்த விருதை பெறுகின்றனர். ஆகஸ்ட் 7ல் டெல்லியில் நடக்கும் தேசிய கைத்தறி தின விழாவில் மத்திய ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங் விருது வழங்க உள்ளார். விருதுடன், தாமிர பத்திரம், சான்றிதழ், 2 லட்சம் ரூபாய் தரப்படும்.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை