குறுவைக்கு பஞ்சமிருக்காது ஆடிபெருக்கு களைகட்டும் Mettur dam| mettur dam open
குறுவைக்கு பஞ்சமிருக்காது ஆடிபெருக்கு களைகட்டும் Mettur dam| mettur dam open கடந்த வாரம் வரை, காவிரி நீர் பிரச்னை, தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் சூட்டை கிளப்பி கொண்டிருந்தது. தண்ணீர் திறக்க முடியாது என அவர்கள் சொல்ல, தமிழகத்தில் இருந்து கண்டன குரல்கள் எழ, பரபரப்பாக இருந்தது. இந்நேரத்தில்தான் தான் வர்ண பகவான் வாரி கொடுத்தார். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. அணைகளை திறக்க வேண்டிய கட்டாயம் கர்நாடகாவுக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணைக்கு கடந்த 17 ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கர்நாடகா அணைகளில் இருந்து தற்போது வினாடிக்கு 1 லட்சத்து 48 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் 109 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி விட்டது. முழுமையாக நிறைய இன்னும் 10 அடி பாக்கி. 71வது முறையாக அணை முழு கொள்ளவை எட்ட உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு குறித்து அதிகரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தார். இன்று அணையை திறக்க உத்தரவிட்டார். முதற்கட்டமாக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக உயர்த்தப்படும். ஆடிப்பெருக்கு விழா மற்றும் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.