உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டல்களில் நாய் இறைச்சி சப்ளை உண்மையா? bengaluru dog meat| mystery meat| bengaluru meat row

ஓட்டல்களில் நாய் இறைச்சி சப்ளை உண்மையா? bengaluru dog meat| mystery meat| bengaluru meat row

ஓட்டல்களில் நாய் இறைச்சி சப்ளை உண்மையா? bengaluru dog meat| mystery meat| bengaluru meat row ராஜஸ்தானின் ஜெய்பூரில் இருந்து பெங்களூருக்கு வந்த ரயிலில், கிட்டத்தட்ட 3 டன் இறைச்சி பெட்டி பெட்டியாக இறங்கின. இந்து அமைப்பை சேர்ந்த புனித் கெரேஹள்ளி என்பவர் இந்த பெட்டிகளில் ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சியும் கலந்து வருவதாக ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். அப்துல் ரசாக் என்பவர் வெளி மாநிலங்களில் இருந்து நாய் இறைச்சி இறக்குமதி செய்து பெங்களூரு ஓட்டல்களுக்கு விற்பதாகவும் குற்றம் சாட்டினார். போலீசார் மற்றும் அதிகாரிகள் ரயில் நிலையத்திற்கு வந்து பார்த்தனர். பெட்டிகளில் இருந்த இறைச்சி, சாதாரண மட்டன் போல் இல்லாமல் சற்று வித்தியாசப்பட்டு இருந்தது. அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். இறைச்சி ஆர்டர் செய்த அப்துல் ரசாக் கூறும்போது, பெங்களூரில் ஆட்டு இறைச்சி போதுமான அளவு கிடைக்காததால் வெளி மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம். அதற்கான உரிமும் ஆவணங்கள் எல்லாம் உள்ள என்றார். இது பற்றி உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் சீனிவாசன் விளக்கம் அளித்தார். இறைச்சி மாதிரிகளில் நாய் இறைச்சிக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அது, சிரோஹி என்ற ஆட்டு இனத்தின் இறைச்சி தான். இந்த வகை ஆடுகள் ராஜஸ்தான், குஜராத்தில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. உடலில் புள்ளிகளும், நீண்ட வாலும் கொண்டவை. அதனால், அது நாய் இறைச்சி என மக்கள் எளிதில் குழப்பம் அடைகின்றனர் என்றார். விலக்கு அறிவியல் முன்னாள் பேராசிரியர் சித்தானன் கூறும்போது, பிரபலமான செம்மறி ஆடுகள் போல் அல்லாமல், கர்நாடகாவுக்கென சொந்த ஆடு வகைகள் இல்லை. இதனால் 25 முதல் 30 சதவீதம் வரை ஆட்டு இறைச்சி பற்றாக்குறை உள்ளது. பெங்களூரு தவிர கர்நாடகாவின் பிற மாவட்டங்களிலும் அதிகளவில் ஆட்டுக்கறி தேவை இருக்கிறது. எனவே வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்றார். இறைச்சி ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களின் உரிமம் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடகா உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது. ET

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை