விதிகளை மீறிய ராகுலால் சபையில் கடும் அமளி! Rahul Speech at Parliament | Congress | Om Birla | BJP
விதிகளை மீறிய ராகுலால் சபையில் கடும் அமளி! Rahul Speech at Parliament | Congress | Om Birla | BJP லோக்சபாவில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார். பட்ஜெட்டுக்கு முன் நிதிஅமைச்சர் நிர்மலா அல்வா கிண்டிய போட்டோ வெளியான செய்தித் தாளை துாக்கி காண்பிக்க முயன்றார். சபை விதிகளை மீறி ராகுல் நடந்து கொள்வதாக கூறிய சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார். தங்களிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். உங்களுக்கென பொறுப்பு உள்ளது. அதை மீறி நீங்கள் நடந்து கொள்வது சரியல்ல என்றார். நான் போட்டோவைத் தான் காட்டுகிறேன். நான் பேசுவது டிவியில் தெரியவில்லை. அதை ஆப் செய்கின்றனர் என ராகுல் குற்றம்சாட்டினார். தொடர்ந்து போட்டோவை காண்பிக்க சபாநாயகர் அனுமதி அளிக்காததால், ராகுல் தன் செயலுக்கு மன்னிப்பு கோரினார். நான் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. சபை விதிகளை கடைபிடியுங்கள் என்று தான் சொல்கிறேன் என சபாநாயகர் கூறினார். பின் ராகுல் தன் உரையை தொடர்ந்தார். எனினும், தொடர்ந்து அவரது பேச்சுகளிலும் சபை விதிமுறைகள் மீறப்பட்டன. சபை உறுப்பினர்களாக இல்லாத ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தொழில் அதிபர்கள் அதானி, அம்பானியின் பெயர்களை குறிப்பிட்டு பேசினார். அதானி, அம்பானியை ஏ1, ஏ2 என குறிப்பிட்டார். ராகுலின் இந்த பேச்சுக்களையும் சபாநாயகர் கண்டித்தார். ராகுல் - ஓம்பிர்லா இடையே நடந்த வாக்குவாதத்தால் சபையில் கடும் அமளி நிலவியது. லோக்சபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போதும், ராகுல் சபை விதிகளை மீறி நடந்து கொண்டார். அதனால் அவரது பேச்சின் சில பகுதிகளில் சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.