உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவர்கள் போராட்டம் தொடர காரணம் என்ன? | Students continue protest

மாணவர்கள் போராட்டம் தொடர காரணம் என்ன? | Students continue protest

மாணவர்கள் போராட்டம் தொடர காரணம் என்ன? | Students continue protest | Delhi | Protest against death of 3 students | Coaching centre | மேற்கு டில்லியில் பழைய ராஜிந்தர் நகரில் ராவ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள் என்ற பயிற்சி மையம் உள்ளது. இதன் அடித்தளத்தில் விதிகளுக்கு மாறாக நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை நூலகத்தில் பயிற்சி மாணவர்கள் சிலர் இருந்தபோது பலத்த மழை பெய்தது. மழை நீர் வடிகால் வழியாக செல்ல வழி இல்லாமல், அடித்தளத்துக்குள் புகுந்தது. தண்ணீரில் மூழ்கி உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரேயா, தெலங்கானாவை சேர்ந்த தன்யா சோனி ஆகிய 2 மாணவிகளும், கேரளாவை சேர்ந்த நவீன் தால்வின் என்ற மாணவனும் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சி மையத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் இறப்புக்கு நீதி கேட்டு ராவ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அருகே நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டில்லி கவர்னர் வி.கே. சக்சேனா சந்தித்து பேசினார். தவறு செய்தவர்களை தப்பிக்க விட மாட்டோம் என கவர்னர் உறுதி அளித்தார். இறந்த மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் டில்லியில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. பயிற்சி மையத்திற்கு வெளியே இரவிலும் முகாமிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பயிற்சியில் சேர்ந்துள்ள நிலையில், மையங்களில் போதிய வசதிகள் இல்லாதது, நீண்டகால உறுத்தலாகவே இருந்துள்ளது. பயிற்சி மையம், அரசு நிர்வாகத்தின் மெத்தனம், அலட்சியத்தால், 3 இளம் உயிர்கள் பலியானது, சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இறந்த மாணவர்கள் குடும்பத்துக்கும் தலா 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை. அதுவும், பயிற்சி மையம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு பயிற்சி மையம் மற்றும் அரசு அதிகாரிகளை பொறுப்பாக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி மையத்தின் அத்துமீறல்களுக்கு உடந்தையாக இருந்து, தடையில்லா சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், அவர்களது வலியுறுத்தல்களில் ஒன்று. மாணவர்களின் கோபம் பயிற்சி மையத்தின் மீதே அதிகமாக இருப்பது அவர்களின் கருத்துகளில் இருந்து தெரிகிறது.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி