உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரேஷன் கடையில் மது விற்பனை சாத்தியமா? | Liqour sale | Ration shops | High court | TN Govt |

ரேஷன் கடையில் மது விற்பனை சாத்தியமா? | Liqour sale | Ration shops | High court | TN Govt |

ரேஷன் கடையில் மது விற்பனை சாத்தியமா? | Liqour sale | Ration shops | High court | TN Govt | தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்க கோரி சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மதுபானங்களை விட, கள்ளில் ஆல்கஹால் அளவு மிகக்குறைவாக உள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில், எந்த இடையூறும் இன்றி கள் விற்பனை நடக்கிறது. இதை, ஆரோக்கிய பானமாக கருதுகின்றனர். அரசு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யலாம். கள் விற்பனையை ஒழுங்குபடுத்தலாம். டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர் முதல் மேலாளர், துறை அமைச்சர் வரை பகிர்ந்து கொள்வதாக மனுவில் குற்றம் சாட்டி இருந்தார். மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அவரது மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது, மாநில அரசின் கொள்கை முடிவு. இது தொடர்பாக ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்கவும், சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மதுபானம் விற்கவும் அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதே சமயம் டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ