திமுகவின் அடுத்த கடத்தல் மன்னன் இப்ராகிம்: தோலுரித்த அ.மலை | Annamalai | Meth
திமுகவின் அடுத்த கடத்தல் மன்னன் இப்ராகிம்: தோலுரித்த அ.மலை | Annamalai | Meth | DMK Ibrahim | BJP சென்னையில் என்சிபி எனப்படும் மத்திய போதை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கி தனிப்படை ரகசிய சோதனையில் ஈடுபட்டது. சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு விலை உயர்ந்த மெத்தம்பேட்டமைன் எனப்படும் போதைப்பொருளை கடத்த முயன்ற கும்பலை அதிரடியாக கைது செய்தது. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பைசல் ரகுமான் என்பவரும், செங்குன்றம் குடோன் ஒன்றில் மன்சூர், இப்ராகிம் ஆகியோரையும் அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். சுமார் 7 கிலோ அளவிலான மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர். இதன் மதிப்பு 70 கோடி ரூபாய் ஆகும். பெரிய அளவில் நடந்த போதை கடத்தல் முயற்சியும், கைது நடவடிக்கையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சம்பவம் பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை. அதாவது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திமுகவை சேர்ந்தவர் என்பதை அண்ணாமலை அம்பலப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 70 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்த முயன்ற 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணைத்தலைவர் இப்ராகிமும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. சர்வதேச அளவிலான போதை கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் திமுக நிர்வாகியாக பதவி வகித்தவர். இப்போது மீண்டும் ஒரு திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்த முயன்றுள்ளார். அதுவும் நம் தலைநர் சென்னையில் கடத்தல் முயற்சி நடந்துள்ளது. இதை எளிதாக கடந்து செல்ல முடியாது. இந்த கும்பலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது? இவ்வளவு ஆண்டுகளாக இல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெரிய அளவில் பொதைப்பொருள் புழங்குவதும் மக்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது. திமுகவினர் போதை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பற்றி ஸ்டாலின் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.