உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீதியை கிளப்பும் உள்ளூர் மக்கள்: நடந்தது என்ன? | Wayanad Landslide | Wayanad Tamils

பீதியை கிளப்பும் உள்ளூர் மக்கள்: நடந்தது என்ன? | Wayanad Landslide | Wayanad Tamils

பீதியை கிளப்பும் உள்ளூர் மக்கள்: நடந்தது என்ன? | Wayanad Landslide | Wayanad Tamils கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று அதிகாலை வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 150ஐ தாண்டிவிட்டது. இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் மயமாகி உள்ளனர் என உயிர் தப்பி வந்தவர்கள் சொல்கின்றனர். ராணுவம், கடற்படை குழு, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவல் படை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவ மோப்ப நாய்களும் வரவழைக்கப்பத்துள்ளது. இதுவரை தமிழகத்தை சேர்ந்த காளிதாஸ், கல்யாண்குமார், ஷிஹாபுதீன் உடல் சேற்றுக்குள் சடலமாக மீட்கப்பட்டது. இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. வயநாடு முண்டக்கை கிராமத்தில் அவர்கள் வசித்து வந்துள்ளனர். தேனியில் இருந்து புலம்பெயர்ந்து முண்டக்கை கிராமத்துக்கு சென்றுள்ளனர். ஒரே வீட்டில் 11 பேர் வசித்து வந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்த தமிழர்கள் 30 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. முழுவதுமாக மீட்பு பணி நடந்து முடியும் வரையில் உறுதியாக எதுவும் தெரிய வராது என்கின்றனர் மீட்பு குழுவினர்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ