உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மயிலாடுதுறை கலவர வழக்கில் மாவட்ட கோர்ட் அதிரடி Thirumavalavan | Court Issue Warrant | Riot Case

மயிலாடுதுறை கலவர வழக்கில் மாவட்ட கோர்ட் அதிரடி Thirumavalavan | Court Issue Warrant | Riot Case

மயிலாடுதுறையில் கடந்த 2003ல், மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து, விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. அப்போது திடீரென கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ஆஜராக திருமாவளவனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜர் ஆகாமல் இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர் விஜய குமாரி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. திருமாவளவன் வரவில்லை. வேலை நிறுத்தம் காரணமாக, திருமாவளவனின் வக்கீல்களும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதனால், திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். 27 ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை