உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆற்றை கண்டு குலைநடுங்கும் வயநாடு-திகில் பின்னணி | Wayanad landslide | dead bodies in chaliyar River

ஆற்றை கண்டு குலைநடுங்கும் வயநாடு-திகில் பின்னணி | Wayanad landslide | dead bodies in chaliyar River

ஆற்றை கண்டு குலைநடுங்கும் வயநாடு-திகில் பின்னணி | Wayanad landslide | dead bodies in chaliyar River இந்த பெயரை கேட்டாலே குலை நடுங்குகின்றனர் வயநாடு மக்கள். காரணம், ஆற்றின் பிறப்பிடம் மக்கள் பலரின் இறப்பிடம் ஆக மாறியது தான். நேற்று முன்தினம் வரை தூய நீரை சுமந்து சென்ற சாலியாறு நேற்று முதல் சவக்குழியாக மாறியது எப்படி? நிலச்சரிவின் போது ஆற்றில் என்ன நடந்தது? கொத்து கொத்தாக சாலியாற்றில் சடலங்கள் மிதந்தது ஏன்? என்பதை இப்போது பார்க்கலாம். சூரல்மலை, முண்டகை பகுதியில் பெய்த பேய்மழையால் செவ்வாய் அதிகாலையில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 24 மணி நேரத்தில் 300 மிமீ மழை கொட்டியதால் இறுகி இருந்த மலையின் மேற்பரப்பு முற்றிலும் நீரில் கலந்து சகதியாக மாறி சரிந்தது. அப்படியே ராட்சத பாறைகள் உருண்டன. நள்ளிரவு 2 மணி அளவில் முதல் நிலச்சரிவு. முண்டகையில் சரிந்த மலை மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரல்மலையில் போய் மோதியது. அடுத்தடுத்து மேலும் 2 நிலச்சரிவு. ஒன்றாக ஓடிய சாலியாறு நிலச்சரிவு விழுந்து இரண்டாக பிரிந்தது. 10 மீட்டர் அகலமே இருந்த சாலியாறு 70 அடி அகலம் வரை விரிந்தது. ஆற்றில் தண்ணீருடன் சகதி வெள்ளம் பாய்ந்தது. வீடுகள், உறக்கத்தில் இருந்த மக்கள், கட்டில், பாத்திரம், காஸ் சிலிண்டர் என மக்களும் மக்களின் மொத்த உடமைகளும் நிலச்சரிவில் புதைந்தன. முக்கால்வாசி சாலியாறில் அடித்து செல்லப்பட்டன. இந்த சம்பவம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை நடந்தது. காலை 7:30 மணி இருக்கும். நிலச்சரிவின் கொடூரத்தை 20 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த மேல குனிப்பாலா பகுதி மக்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. அந்த ஊரை சேர்ந்த சிலர் சாலியாறு பக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். திடீரென பாத்திரங்கள், கட்டில், மெத்தை என வீட்டு உபயோக பொருட்கள் மிதந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றின் கரையோரம் மூங்கில் புதரில் சிறுவன் சடலம் ஒன்று சிக்கி இருப்பதை பார்த்து பதைபதைத்து போனார்கள். சடலத்தை மீட்டனர். சிறுவனுக்கு 3 வயது தான் இருக்கும். சடலத்தை கரைக்கு கொண்டு வந்து 10 நிமிடம் தான் இருக்கும். அடுத்தடுத்து பல சடலங்கள் ஆற்றில் மிதந்து வர மேல குனிப்பாலா மக்கள் இதயமே நொறுங்கியது. சடலங்களை மீட்கும் பணியில் இறங்கினர். நிலச்சரிவு செய்தி காட்டுத்தீயாக பரவியது. மீட்பு படையினரும் விரைந்தனர். மேல குனிப்பாலா, வெள்ளிமேடு, போத்துக்கல் உள்ளிட்ட பகுதியிலும் அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்பட்டன. 2 மணி நேரத்தில் மொத்தம் 11 சடலங்களை மீட்டனர். மாலையில் இந்த எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. 32 சடலங்கள் முழுமையாக மீட்கப்பட்டன. மற்றவை எல்லாம் பாதி, பாதி உடல்கள் தான். சில சடலங்களில் கை இல்லை. சில சடலங்களில் தலை இல்லை. ஒரு சடலத்தில் இடுப்புக்கு கீழ் எதுவும் கிடைக்கவில்லை. இன்றும் சாலியாறில் சடலங்கள் கிடைத்தன. மதியம் வரை 15 சடலங்களை வீரர்கள் மீட்டனர். இன்னும் எத்தனை சடலம் கிடைக்குமோ தெரியவில்லை. சாலியாறு தான் கேரளாவின் 4வது பெரிய நதி. வயநாட்டில் துவங்கி மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்கள் வழியாக அரபிக்கடலை அடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 169 கிலோ மீட்டர் ஆகும்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி