சுற்றுச்சூழல் பாதுகாவலர் காட்கில் சொன்னது நடந்தது Wayanad | land slide
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் 3வது நாளாக மீட்பு பணிகள் நடக்கிறது. அப்பகுதியில் இருந்த பெரும்பாலன வீடுகள் மண்ணில் புதைந்ததால், குவியல் குவியலாக சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்தது. அதில் சுமார் 89 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் மொத்தமாக பலியாகி இருப்பதால் உடலை வாங்குவதற்கு கூட யாரும் இல்லாத நிலை உருவாகி உள்ளது. நிலச்சரிவால் சூரல்மலையில் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் அடித்து செல்லப்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் 2 நாட்களாக போராடி, பெய்லி என்ற தற்காலிக இரும்பு பாலம் அமைத்துள்ளனர்.
ஆக 01, 2024