/ தினமலர் டிவி
/ பொது
/ பாஜ பார்த்து கொண்டு சும்மா இருக்காது என அண்ணாமலை எச்சரிக்கை! Annamalai | BJP
பாஜ பார்த்து கொண்டு சும்மா இருக்காது என அண்ணாமலை எச்சரிக்கை! Annamalai | BJP
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் தொகுப்பில் இலவச வேட்டி, சேலை திட்டம் எம்ஜிஆர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர், கோவை சரக விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல லட்சம் நெசவாளர்கள் பயன் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தமிழக அரசால் நூல் கொள்முதல் பணிகள் துவங்கும். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தி திட்டத்தில் ஊழல், முறைகேடு பெருகி உள்ளது.
ஆக 01, 2024