உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யார் இந்த பேகம் கலிதா ஜியா வங்கதேசத்தில் அடுத்த ட்விஸ்ட் Kalitha jiya | Ex Pm | Bangladesh

யார் இந்த பேகம் கலிதா ஜியா வங்கதேசத்தில் அடுத்த ட்விஸ்ட் Kalitha jiya | Ex Pm | Bangladesh

யார் இந்த பேகம் கலிதா ஜியா வங்கதேசத்தில் அடுத்த ட்விஸ்ட் Kalitha jiya | Ex Pm | Bangladesh வங்கதேசத்தில், விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். அவாமி லீக் அரசு கலைக்கப்பட்டது. பார்லிமென்ட், பிரதமர் இல்லம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா தற்காலிகமாக இந்தியாவில் தங்கி உள்ளார். ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலீதாவை சிறையில் இருந்து அதிபர் முகமது ஷஹாபுதீன் விடுதலை செய்தார். அத்துடன், ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 5- வரை கலவரத்தின்போது கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர். யார் இந்த பேகம் கலீதா ஜியா? வங்கதேசத்தின் பிரதான எதிர்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலீதா ஜியா. அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் விலகியே இருக்கிறார். 78 வயதான அவருக்கு நீரிழிவு, இருதய பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் உள்ளன. ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் உட்பட குடும்பத்தினர் ராணுவத்தால் கொல்லப்பட்டபோது, துணை தளபதியாக இருந்த ஜியாவுர் ரஹ்மான் ஆட்சியை கைப்பற்றினார். இவர் கலீதா ஜியாவின் கணவர். இதனால், கலீதாவுக்கு ஹசீனாவுக்கும் இடையே அரசியலை தாண்டி சொந்த பகையும் இருந்தது. சில ஆண்டுகளில் ஜியாவுர் ரஹ்மானும் கொல்லப்பட, ஆட்சி அதிகாரம் ராணுவ தளபதி முகமது எர்ஷாத்தின் வசம் சென்றது. ராணுவ ஆட்சிக்கு எதிரான ஹசீனாவின் தொடர் போராட்டத்தில், கலீதாவும் சேர்ந்து கொண்டார். 1990ல் எர்ஷாத்தின் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த தேர்தலில் கலீதா ஜெயித்து முதல் பெண் பிரதமர் ஆனார். 1991 டு 96, 2001 டு 2006 காலகட்டத்தில் 2 முறை பிரதமராக இருந்தார். ஹசீனாவும் மாறி மாறி ஆட்சியை பிடித்தார். 2018ல் அவர் ஆட்சியில் இருந்தபோது, ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக சிறை காவலில் வைக்கப்பட்டு இருந்தார். தற்போது ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் கலீதா விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை