/ தினமலர் டிவி
/ பொது
/ கொள்ளிடத்தில் ஓடி 6வது நாள் கடலில் கலக்கும் காவிரி | cauvery issue | kollidam | DMK Govt fails
கொள்ளிடத்தில் ஓடி 6வது நாள் கடலில் கலக்கும் காவிரி | cauvery issue | kollidam | DMK Govt fails
மேட்டூர் அணையில் திறந்த தண்ணீர் 6வது நாளாக கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் கலப்பது விவசாயிகளை கண்ணீர் வடிக்க செய்துள்ளது. மேட்டூர் அணை படிப்படியாக நிரம்பும் போதே தண்ணீர் திறக்காமல் கடைசி நேரத்தில் ஒரேயடியாக காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டது பொதுப்பணித்துறை. ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருச்சி மேலணையை அடைந்த பிறகு காவிரியிலும் கொள்ளிடம் ஆற்றிலும் இரண்டாக பிரிந்து சென்றது. காவரியில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. முக்கால்வாசி நீர் கொள்ளிடம் ஆற்றில் சென்றது.
ஆக 07, 2024