உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே குத்தில் முடிந்த ஒலிம்பிக் மேட்ச்; ஏன் இந்த பாலின சர்ச்சை? | Imane Khelif Wins Gold

ஒரே குத்தில் முடிந்த ஒலிம்பிக் மேட்ச்; ஏன் இந்த பாலின சர்ச்சை? | Imane Khelif Wins Gold

ஒரே குத்தில் முடிந்த ஒலிம்பிக் மேட்ச்; ஏன் இந்த பாலின சர்ச்சை? | Imane Khelif Wins Gold | Female Boxer | Paris Olympics பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் 33வது ஒலிம்பிக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல உணர்ச்சிகரமான தருணங்கள், சில சில சர்ச்சைகள் என சுவாரஸ்யங்கள் நிறைந்து இந்த ஒலிம்பிக் நடந்துள்ளது. மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில், சீன வீராங்கனை யாங்க் லியூவை 5க்கு0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிப் (Imane Khelif) தங்கம் வென்றுள்ளார். அவரின் வெற்றியை பலர் கொண்டாடி வரும் நேரத்தில் அவர் பாலின சர்ச்சைக்கு ஆளான விவகாரமும் பேசு பொருளாகி உள்ளது. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம். இமானே கெலிப்புக்கு வயது 25. கடந்த வாரம் 66 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினியுடன் மோதினார். ஆரம்பித்த 46 வினாடிகளிலேயே சண்டை முடிந்தது. முதலில் கரினி முகத்தில் ஒரு பவரான பஞ்ச் வைத்தார் கெலிப். மூக்கில் ரத்தம் சொட்டியது. நிலை குலைந்த கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார். கெலிப் ஒரு பெண் போல தெரியவில்லை, அவருடன் சண்டையிட முடியாது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். தொடர்ந்து கெலிப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வெளியே வந்து கண்ணீர் மல்க பேட்டி அளித்தார் கரினி, என் விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு பவரான பஞ்ச்சை யாரிடமும் வாங்கியதில்லை. போட்டியில் நான் அச்சம் கொள்ளவில்லை, ஆனால் ஆணுடன் மோத முடியாது என்றார். இந்த விவகாரம் சர்ச்சையானது. கெலிப்புக்கு ஆதரவாகவும், அதே நேரம் எதிராகவும் பலர் கருத்து கூற துவங்கினர். கெலிப் பாலின சர்ச்சையில் சிக்கியுள்ளதும் தெரிய வந்தது. 2023 உலக சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதியை நிரூபிக்க கெலிப் நிர்பந்திக்கப்பட்டார். அந்த சோதனையில் கெலிப் மற்றும் 2 முறை உலக சாம்பியனான தைவான் வீராங்கனை லின் யுடிங், பாலின தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். நடத்தப்பட சோதனையின் தனித்தன்மை குறித்த முழு விவரம் வெளியாகவில்லை. டெஸ்டோடிரான் ஹார்மோன்கள் அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது. கெலிப்புக்கு ஆண்களுக்கான XY குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தான் அவர் வெளியேற்றப்பட்டார் என்றும் பலர் சர்ச்சை கருத்துக்களை கூற தொடங்கினர். பூதாகரமாக வெடித்த இந்த விவகாரத்தில் கெலிப்புக்கு ஆதரவாக ஒலிம்பிக் கமிட்டி துணை நின்றது. கெலிப் மற்றும் யுடிங் இருவரும் தங்களை பெண்களாக அடையாளப்படுத்தி கொள்கின்றனர். (testosterone) டெஸ்டோடிரான் வளர்ச்சி பெரும்பாலான வீராங்கனைகளுக்கு அதிகமாக இருக்கும். இதை வைத்து ஒரு வீராங்கனையை தவறாக கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது அனைத்து மருத்துவ விதிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு தான் போட்டியில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 2 வீராங்கனைகள் பற்றிய தவறான தகவல்களையும் நாங்கள் கவனித்து வருகிறோம். பெண்கள் பிரிவில் இந்த 2 வீராங்கனைகளும் பல ஆண்டுகளாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடி வருகின்றனர். வீராங்கனைகள் எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கமளித்தது. வெற்றி குறித்து இமானே கெலிப் கூறுகையில் ; நான் ஒரு பெண்ணாகவே பிறந்து பெண்ணாகவே வாழ்ந்து வருபவள். இது என் கனவு. இந்த வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது வெற்றியை சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. என் பாலினம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனைவருக்கும் இந்த வெற்றி பதிலடி கொடுக்கும் என்றார்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை