உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மோடி மகிழ்ச்சி World Elephant Day | August 12 | PM Greetings |

யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மோடி மகிழ்ச்சி World Elephant Day | August 12 | PM Greetings |

யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மோடி மகிழ்ச்சி World Elephant Day | August 12 | PM Greetings | மக்கள் தொகை பெருக்கம், தொழில் மயமாக்கல் போன்ற காரணங்களால் ஆசிய, ஆப்பிரிக்க யானைகளின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இது மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலை அதிகரிக்கச் செய்கிறது. 2012 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ல் உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய அழகு, இறையியல் தொடர்பு, சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துவத்தை கருப்பொருளாக கொண்டு இந்தாண்டு யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகள் நெடுந்தூரம் சென்று மேயும் விலங்கு. தினமும் அதிக அளவு உணவு உட்கொள்கின்றன. எங்கே சென்றாலும் கழிவுகள் மூலம் விதைகளை பரப்புகின்றன. தாவரங்களின் வளர்ச்சிக்கும், காடுகளின் மீட்டுருவாக்கத்துக்கும் பெரும் பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட யானைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவாதிப்பதற்கான வாய்ப்பை உலக யானைகள் தினம் வழங்குகிறது. இந்த தினத்தில் மக்கள் ஒன்று கூடி யானைகளை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இதனால் உலகெங்கும் உள்ள அரசுகள் யானைகளுக்கான பாதுகாப்பு உத்திகளை வகுத்து செயல்பட முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மர் நாட்டில் 2-வது பழமையான பெரிய பூங்காவாக கருதப்படும் யாங்கோன் பூங்காவில் உலக யானைகள் தினத்துக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆசிய கண்டத்தின் மிக வயதான யானையாக அறியப்படும் மோ மோ இங்குதான் உள்ளது. அதன் வயது 71. இந்த யானை குறித்து பூங்காவுக்கு சென்ற பார்வையாளர்கள் ஆச்சரியமூட்டும் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக யானைகள் தினம் யானைகளை பாதுகாக்க, பரந்த அளவில் நடக்கும் முயற்சிகளை பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பு. யானைகள் சிறப்பாக வளரக்கூடிய வாழ்விடத்தைப் பெற வேண்டும். அதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். நமது நாட்டைப் பொறுத்தவரை யானை நம் கலாச்சாரம் மற்றும் வரலாறுடன் தொடர்புகொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ