வேட்டி கட்டி வருவதாக கூறி எஸ்கேப் ஆன மாஜி MLA கணவர் Former mla pon saraswathi
வேட்டி கட்டி வருவதாக கூறி எஸ்கேப் ஆன மாஜி MLA கணவர் Former mla pon saraswathi husband ponnusami arrested ADMK ex திருச்செங்கோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி. அதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பொன்னுசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். நாமக்கல் அருகே சிலுவம்பட்டியை சேர்ந்த எட்டிக்கண் (72) என்பவருக்கு காதப்பள்ளி கிராமத்தில் 5.8 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 8400 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தன்னிடம் டிரைவராக வேலை பார்க்கும் சந்திரசேகர் பெயருக்கு பொன்னுசாமி பதிவு செய்துள்ளார். நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்துள்ளது. நிலத்தின் உரிமையாளர்களான எட்டிக்கண், அவரது மகன் வேலுசாமி ஆகியோரது புகைப்படங்களை மாற்றி ஆள்மாறாட்டம் செய்து பொன்னுசாமி பத்திரப்பதிவை செய்துள்ளார். இதையறிந்த எட்டிக்கண், அவரது மகன் வேலுசாமி அதிர்ச்சியடைந்தனர். கடந்த 1ம்தேதி பொன்னுசாமி மீது நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு 50 கோடி ரூபாய். பொன்னுசாமி மீதும், மோசடிக்கு உடந்தையாக இருந்த நாமக்கல் சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் எட்டிக்கண் கூறியிருந்தார். அதனடிப்படையில் முன்னாள் எம்எல்ஏ கணவர் பொன்னுசாமி, ஆள்மாறாட்டம் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புகார் பற்றி விசாரிக்க திருச்செங்கோட்டில் உள்ள பொன்னுசாமி வீட்டுக்கு தனிப்படை போலீசார் சென்றனர். லுங்கி அணிந்திருந்த பொன்னுசாமி வேட்டி அணிந்து வருவதாக கூறி, அறைக்குள் சென்றார். பின்வாசல் வழியாக தப்பி ஓடி விட்டார். தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடினர். திருப்பூரில் பதுங்கியிருந்த பொன்னுசாமியை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.