சனாதன வழக்கில் உதயநிதியின் கோரிக்கை நிராகரிப்பு | Udhayanidhi | Supreme Court
சனாதன வழக்கில் உதயநிதியின் கோரிக்கை நிராகரிப்பு | Udhayanidhi | Supreme Court சென்னையில் கடந்த ஆண்டு நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு பற்றி பேசியிருந்தார். டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழித்தது போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தார். சனாதன தர்மம் இந்துக்களுக்கானது; சனாதனத்தை ஒழிப்பேன் என்பது இன ஒழிப்புக்கு சமம் என பாஜ எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். லோக்சபா தேர்தலின் போதும் உதயநிதியின் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு சர்ச்சையானது. உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிராக கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற கோரி சுப்ரீம் கோர்ட்டில் உதயநிதி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. உதயநிதிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற முடியாது என்றனர். பிற மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் உதயநிதி நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் நவம்பர் 18க்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.