உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் டாக்டர் மரணத்தில் யாரும் கற்பனை செய்யாத திருப்பம் | kolkata woman doctor death | kolkata case

பெண் டாக்டர் மரணத்தில் யாரும் கற்பனை செய்யாத திருப்பம் | kolkata woman doctor death | kolkata case

பெண் டாக்டர் மரணத்தில் யாரும் கற்பனை செய்யாத திருப்பம் | kolkata woman doctor death | kolkata case சுதந்திர தின ஐ-பேப்பர் ஆஃபர் 50% தள்ளுபடி Subscribe Now: https://subscription.dinamalar.com/?utm_source=ytb கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடூர காரியத்தை செய்த சஞ்சய் ராய் என்ற அரக்கன் கைது செய்யப்பட்டு விட்டான். அவனிடம் சிபிஐ விசாரணை நடக்கிறது. இப்போது நாட்டையே உலுக்கும் புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதன் பின்னணியில் ஒருத்தன் மட்டும் அல்ல; இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகம் கடுமையாக வலுத்துள்ளது. பெண் டாக்டரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பற்றி இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பின் கூடுதல் பொதுச்செயலாளர் சுபர்னா கோஸ்வாமி பகீர் கிளப்பி உள்ளார். அவர் கூறியது: பெண் டாக்டரின் உடலில் கொடூரமான பல காயங்கள் உள்ளன. நிச்சயம் இந்த காரியத்தை ஒருத்தனால் செய்திருக்க முடியாது. எல்லாவற்றையும் விட டாக்டரின் உடலில் இருந்து 151 கிராம் திரவம் கிடைத்திருக்கிறது. இந்த அளவு திரவம், உறுதியாக ஒருத்தனுடையது அல்ல. பெண் டாக்டரை கொடூரன்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதே சந்தேகத்தை கோர்ட்டில் பெண் டாக்டரின் பெற்றோரும் எழுப்பினர் என்று டாக்டர் கோஸ்வாமி கூறினார். பெண் டாக்டரின் மூக்கு, வாயை பொத்தி, அவரது தலையை சுவற்றில் ஓங்கி அடித்து இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்தது. அவரது தைராய்டு குருத்தெலும்பு நொறுங்கி இருந்தது. வலது கையிலும், விரல்களிலும் பலத்த காயங்கள் இருந்தன. முகத்திலும், கையிலும் வெட்டுக்காயங்கள் இருந்தன. கன்னத்தில் நகக்கீறல் இருந்தது. உதடும் காயம் பட்டிருந்தது. அடி வயிறு, இடது காலில் ரத்த காயம் இருந்தது. மோதிர விரலிலும் நகப்பகுதியிலும் கொடூர காயங்கள் இருந்தன. உடலின் பல இடங்களில் கீறல் இருந்தது. பெண் டாக்டரின் பிறப்புறுப்பில் இருந்து அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு இருந்தது என்றெல்லாம் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் ஏற்கனவே அதிர வைத்தது. பெண் டாக்டரின் 2 கண்களில் இருந்தும் கூட ரத்தம் கசிந்து இருக்கிறது. ஆனால் இதற்கான காரணம் துல்லியமாக தெரியவில்லை. இப்போது புதிதாக வெளியே வந்து இருக்கும் பிரேதச பரிசோதனை அறிக்கை பற்றிய தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை