நாகேந்திரன் கோரிக்கை நீதிபதி போட்ட உத்தரவு BSP Armstrong murder case
நாகேந்திரன் கோரிக்கை நீதிபதி போட்ட உத்தரவு BSP Armstrong murder case | Ashwathaman | Rowdy Nagenthiran | Sembiam Police சுதந்திர தின ஐ-பேப்பர் ஆஃபர் 50% தள்ளுபடி Subscribe Now: https://subscription.dinamalar.com/?utm_source=ytb பகுஜன் சமாஜ் கட்சியின் மு்ன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20க்கு மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் ஆகியோரும் கைதானவர்களில் அடக்கம். வேலூர் சிறையில் இருந்தே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உதவியதாக ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர். அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நாகேந்திரனை எழும்பூர் கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினர். இதையொட்டி, கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாகேந்திரனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டதால், போலீஸ் காவலில் செல்லமாட்டேன் என நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார். உடல்நிலை சரி இல்லாததால் வாரம் 2 முறை டயாலிசிஸ் செய்து வருகிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பவேண்டாம் என நீதிபதியிடம் கேட்டார். இருப்பினும் ரவுடி நாகேந்திரனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். நாகேந்திரனை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். நாகேந்திரனை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ள நிலையில், இன்னும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.