உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடைசி நேரத்தில் பெண் டாக்டர் எழுதிய டைரி குறிப்பு | kolkata woman doctor case | kolkata doctor diary

கடைசி நேரத்தில் பெண் டாக்டர் எழுதிய டைரி குறிப்பு | kolkata woman doctor case | kolkata doctor diary

கடைசி நேரத்தில் பெண் டாக்டர் எழுதிய டைரி குறிப்பு | kolkata woman doctor case | kolkata doctor diary கொல்கத்தாவில் மேற்படிப்பு படித்து வந்த இளம் பயிற்சி பெண் டாக்டர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செமினார் ஹாலில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது. பெண் டாக்டர் மிக கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த காரியத்தை செய்த சஞ்சய் ராய் அரக்கன் கைது செய்யப்பட்டான். அவன் சொந்த வாழ்க்கையிலும் மிகப்பெரிய கொடுமைக்காரனாக இருந்தான். அவனது கொடுமை தாங்க முடியாமல் 3 மனைவிகள் ஓடிவிட்டனர். 4வது மனைவி கேன்சர் பாதிப்பில் இறந்தார். ஆனால் அந்த அரக்கன் சிதைத்த 31 வயதான பெண் டாக்டர் மிகவும் மென்மையானவர். பட்டாம் பூச்சி போல பல கனவுகள் அவரது மனதில் சிறகடித்தன. தன் மேற்படிப்பையும் டாக்டர் பணியையும் அலாதியாக நேசித்தார். எவ்வளவு நேசித்தார் என்றால், உயிர் போகும் முன்பு இறுதியாக அவர் எழுதிய டைரி குறிப்பு தான் அதற்கு சாட்சி. சம்பவத்துக்கு முன்பு பெண் டாக்டர் நைட் ஷிப்ட்டில் இருந்தார். வேலை முடிந்து ஓய்வெடுக்க செமினார் ஹால் போனார். அந்த நேரத்தில் வழக்கமாக எழுதும் டைரியில் சில குறிப்புகளை எழுதினார். அனைத்தும் அவரது படிப்பு பற்றி தான் இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், எம்டி படிப்பில் முதல் இடம் பிடிக்க வேண்டும்; எப்படியாவது கோல்ட்மெடலிஸ்ட் ஆக வேண்டும் என்று தனது விருப்பதை அதில் எழுதி இருந்தார். நண்பர்களுடன் டின்னர் சாப்பிட்ட பிறகு அவர் மட்டும் இருந்து படித்தார். கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி வரை படித்து இருக்கிறார். பிறகு தான் தூங்க ஆரம்பித்தார். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் கண்ட கனவு எல்லாம் கலைந்தது. மிகவும் கொடூரமான முறையில் அவரை சஞ்சய் ராய் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டான். சீக்கிரமே தேர்வில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்துடன் மகளை பார்ப்போம் என்று ஆசையை சுமந்த பெற்றோர், அரை நிர்வாண கோலத்தில் மகளை சடலமாக பார்க்க நேர்ந்தது கொடுமையின் உச்சம். இனி எங்க பொண்ணு எப்டி திரும்ப கிடைப்பா... அவ கண்ட கனவு எல்லாம் சிதைஞ்சி போச்சேனு பெண் டாக்டரின் அப்பா கண்ணீர் வடித்த போது இதயமே நொறுங்கியது. கோல்ட்மெடலிஸ்ட் ஆக வேண்டும் என்ற கனவு மட்டும் அல்ல; அதற்கான கடின உழைப்பும் கொல்லப்பட்ட பெண் டாக்டரிடம் இருந்தது. எங்க பொண்ணுக்கு படிப்பது தான் சார் பர்ஸ்ட். தினமும் 10-12 மணி நேரம் படிப்பா என்று நொறுங்கிய மனதோடு பேசினார் அப்பா. அவர் மேலும் கூறியது: அவ எப்பவும் பாட புத்தகத்துலயே தான் மூழ்கி கிடப்பா. கடினமா உழைக்க கூடியவ. துணிச்சலும் ஜாஸ்தி. பெரிய டாக்டராகனும்னு அவ கனவ அடைய கடுமையாக போராடினா. அவள வளர்க்கவும், அவ கனவ அடையவும் நாங்க பல தியாகங்கள செஞ்சோம். ஆனா இப்ப எல்லாம் சிதைஞ்சி போச்சுனு ஆதங்கப்பட்டார் அப்பா. இனி எப்டியும் எங்க பொண்ணு திரும்ப வரப் போறது இல்ல. ஆனா நாடு எங்களுக்காக பண்ற சப்போர்ட் தைரியம், நம்பிக்கை தந்து இருக்கு. என் பொண்ணுக்கு நீதி கிடைக்கிற வர நம்பிக்கைய விடமாட்டோம். நிச்சயம் நீதி கிடைக்கும்னு நம்புறோம். எங்க இழப்ப எதுவுமே ஈடு பண்ண முடியாது. ஆனா குற்றவாளிங்க தப்பக்கூடாது. சீக்கிரமே தண்டிக்கப்படனும். அவங்களுக்கு மரண தண்டன குடுக்கனும் என்று பெண் டாக்டரின் அப்பா வலியுறுத்தினார்.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ