முதுமலை முகாமில் பிறந்த நாள் கொண்டாடிய யானை | Elephant | Mudumalai
முதுமலை முகாமில் பிறந்த நாள் கொண்டாடிய யானை | Elephant | Mudumalai நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில் 29 யானைகள் பராமரிக்கப்படுகிறது. இதில் பல யானைகள் முதுமலை முகாமில் வளர்ந்த ருக்கு என்ற பெண் யானை போட்ட குட்டிகளாகும். 1971ல் ஆகஸ்ட் 15ல் ருக்குவுக்கு பிறந்தது சந்தோஷ் என்கிற யானை. ருக்கு மறைவுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று சந்தோஷூக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை தொடர்ந்து வனத்துறை சார்பில் வளர்ப்பு யானை சந்தோஷுக்கு 53வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சந்தோஷ் விரும்பி உண்ணக்கூடிய கேழ்வரகு, தேங்காய் சேர்த்த இனிப்பு கேக் தயாரிக்கப்பட்டது. பாகன் மாறன், வனக்காப்பாளர் கோபால் கேழ்வரகு கேக் வெட்டி வளர்ப்பு யானை சந்தோஷுக்கு ஊட்டினர்.